இடுகைகள்

பிருந்தாகுட்டியும் சிருங்கார புன்னகையும்  😍 யாரும் என்னைப்பற்றி  உன்னிடம் சொல்வதற்கு முன்பே  உனக்கு எல்லாமும்  தெரிந்து தான் இருந்தது. இருந்தபோதிலும் எதுவுமே தெரியாதது போல் இருக்க ஒவ்வொரு முறையும் என்னை ஏமாற்றுவதாய் நினைத்து ஒரு குழந்தையை போல நீ செய்யும் பிரயத்தனங்களை பார்க்கையிலெல்லாம் தவறு செய்து மாட்டிக்கொண்ட பிறகு தாயின் பின் சென்று எட்டிப்பார்த்துக்கொண்டே நாக்கை துருத்தியபடி கண்களை பொத்தி முகம் மறைக்கும் பிருந்தா குட்டியைப் போல மலரும் சிருங்கார புன்னகையை உதிர்க்கும் உனது முகமே போதும் எனக்கு இனி மீண்டும் இப்படி எல்லாம் நிகழப் போவதில்லை என்று தெரிந்து தான் எழுதி கொண்டிருக்கிறேன் இதை * நான் இப்போது நிலம் பார்த்தபடி  ஒரு நிச்சலனத்தில்  அப்படியே இருக்கிறேன்.  எனக்குள் சுழலும் வர்ணங்களின் மாயமாகிய சின்னஞ்சிறு அன்பினையெல்லாம்  என்னால் மட்டுமே உணர முடியும்;  ஆனால் எல்லா வசந்தங்களும் எப்போதும் என்றைக்கும் அப்படியே இருப்பதில்லை அல்லவா? அப்படித்தான் உங்களுக்கெல்லாம் நான் இப்போது ஒரு உண்மையைச் சொல்லப்போகிறேன். நிஜத்தில் என் மகிழ்வின் நிச்சலனச் சக்கரம் எப்போதோ சுழற்சியை நிறுத்தி விட்ட

நானொரு மகிழ்பரி

* மேலிருந்து கீழ் நோக்கி மூன்று வார்த்தை கீழிருந்து மேல் நோக்கி மூன்று வார்த்தை இடமிருந்து வலமாக மூன்று வார்த்தை வலமிருந்து இடமாக மூன்று வார்த்தை திக்கித் திணறி தப்பும் தவறுமாய் நிரப்புகையில் யாவற்றுக்கும் கடைசியாக கழுத்தின் பக்கவாட்டில் கைவைத்து சிரித்தபடி பதுவசாக பார்க்கையில் பித்து மொத்தமும் தலைக்கேறி கிறுக்கெழுத்துப்புதிராகிவிடுகிறேன். *சிறப்பு குறிப்பு: மேற்சொன்ன மூன்றெழுத்து வார்த்தை காதல் மட்டும் அல்ல நான் குவிந்து கிடக்கும் எண்ணற்ற ஸ்மைலிக்களில் நீங்கள் சொல்லத் தயங்கும்  ஒரு சிறு அன்பை சின்னச் சின்ன கண்களில் நிரப்பி அதில் செல்ல வெட்கச்சிவப்பாய் காதல் மின்னும் புன்னகைகளை செய்பவன் நான் எக்கச்சக்கமாய் கிடைக்கும் இச்சை நிறைந்த பல வண்ண இதயங்கள் இருந்தாலும் பச்சை வண்ண இதயம் மட்டுமே எனக்குப் பிடித்திருந்தாலும் துடிக்கத் துடிக்க துடிப்பாய் அன்பைச் சொல்லும் சுகந்தமான செக்கச்சிவந்த ரத்த இதயமும் எனக்கு செய்யத்தெரியும் நான் ஆச்சர்யங்களைக் கூட கண்களில் நட்சத்திரங்கள் வைத்து உங்கள் பிரம்மிப்பை ஒரு பிரம்மாண்ட பிம்பமாய் செய்பவன் நான் இன்னும் மிக மிகச் சின்னதாய் ஓராயிரம் ஸ்மைலிக

ஒலித்துக் கொண்டிருக்கும் இசை நாடா

படம்
ஆம், எனக்கு ஒரு விசேஷ பழக்கம் இருக்கிறது. அது, வித்தியாசங்கள் நிறைந்த இசைக் கோப்புகளை சேகரிப்பது. இசைத்தட்டின் ஒவ்வொரு இழை இசையும் ஒன்றுக்கொன்று சற்றும் தொடர்பற்ற விநோத சப்தங்கள் நிறைந்தவை. இந்த விசேஷ பழக்கத்தின் வித்தியாச இசை கோப்பினுடைய விநோத சப்தங்களை நீங்கள் கேட்க துவங்கையில் அந்தந்த காலத்தின் நினைவுகளில் நிறுத்தி உங்களை சுழல வைக்கும். இங்கிருக்கும் ஏதோ ஓர் இசைக் கோப்பில் யாருமின்றி நீங்கள் உடைந்து கதறி அழுத பொழுதொன்றில் கண்ணீர் துடைக்க ஆளின்றி இருந்த அந்த கணத்தை இப்போது கேட்கையிலும் ஒலிக்கிறது அன்றிருந்த  அதே நிசப்தத்தின் சப்த்தம். இதோ மக்களுக்கு எதிராய் நடந்து கொண்டிருக்கும் அரசியல்; அந்த அரசியலுக்கு எதிராய் செய்யப்படும் புரட்சி; புரட்சி என்கிற பெயரில் செய்யப்படும் அரசியல். இப்படியாக முடிவிலா சுழற்சியில் இயங்கும்  ஒரு விடையில்லா வினாக்கள் மட்டுமே நிறைந்து இசைக்கும் ஒரு  கோப்பு. இப்போதைக்கு என் இசைத் தட்டில் திகட்டத் திகட்ட காதல் மலரும் இசை இசைத்து கொண்டிருக்கிறது. நான் தற்பொழுது என் வசந்த காலத்தில் சுழன்றபடி கவலை ஏதுமற்ற அ

எனப்படுவது யாதெனில்-II

😍 இப்போதைக்கு கொஞ்சம் புன்னகைகள் கடன் கொடு; காதலை பிறகு பார்க்கலாம் 😍 நீயும் நானும் சேர்ந்து மெதுவாக நகரும் இந்த வரிசை இன்னும் கொஞ்சம் நீட்சித்திருக்கலாம் 😍 கொஞ்சமும் புன்னகைக்காமல் சற்று அனாயசமாக புருவம் துருத்தி நீ பார்க்கும் பொழுதுகள் 😍 அவளின் பேரன்பின் பிரியம் நிறைந்த அந்த ஒரு பெரும் புன்னகைப்படம் பிரதியெடுக்கவியலாதொரு மீள்பிம்பம் 😍 இந்த அர்த்தஜாமத்தில் விழிகளில் இதயம் வைத்து நீ அனுப்பும் அந்த ஒற்றை குறுஞ்செய்தி <3 இன்றைய மாலைநேர தேநீர் இடைவேளையில் நீ என்னை கடந்து சென்ற நிமிடங்களை சிருகச் சிருக இப்போது மீட்கிறேன்; பொழியும் பெருமழையினை சொட்டுச் சொட்டாக ஒரே கோப்பையில் மொத்தமாக நிரப்புவதைப் போல <3 குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் கோவப்படு; புருவங்கள் சுருக்கி கழுத்தை பக்கவாட்டில் திருப்பிக்கொள்கையிலெல்லாம் தேவதையில் இருந்து குழந்தையாய் உருமாறும் மாயங்கள் யாவும் உன் முகத்தில் உனக்கே தெரியாமல் நிகழ்கிறது <3 😍 காத்திருப்பு நாற்காலியில் அமர்ந்தபடி, உனை கடந்து செல்லும் என்னை லேசாக தலை சாய்த்து பா

ஒரே கனா

தகிக்கும் மதியத்தில் ஒரு குவளை நீருக்கு காத்திருக்கும் அவனது தொண்டைக்குழிக்குள் கனன்று எரிந்தபடி இருக்கிறது ஒரு நெருப்புக் கனவு. தன்னை நோக்கி சிரிப்பவர்களை புன்னகையுடன் கடந்து செல்கிறான். மாற்றத்தின் வசந்த பாதைகளை தனியனாக அவனே தகவமைக்கிறான் . விரக்தியின் விழிகளை மறைத்து எப்போதும் போல புன்னகைக்கிறான். இப்போதைக்கு சுரக்கும் உமிழ்நீரை விழுங்கிக் கொள்கிறான் கொஞ்சம் குளிர்ந்து மீண்டும் கனல்கிறது அந்த ஒரே கனா

செங்கொடியாகிய நாங்கள்

எல்லா  பெருங்கனவுகளும்  அடங்கியபின் ஒரு எளிய சமரசத்தினால் எல்லாவற்றையும் மறக்கடிக்க முடியுமென  நினைக்காதீர்கள் தோழமைக் கட்சிகளே... செங்கொடிகள் நெருப்பு மலர்களை பற்றியபடி உங்களை நோக்கி புன்னகைத்து கொண்டிருக்கிறார்கள்... ஒரு யுக மாற்றத்தை தடைகளை உடைத்து நடுச் சாலையில் எழுத ஆரம்பித்துவிட்டனர்... சொகுசு காரில் இருந்து இறங்காமல் திரும்பிச் செல்வதே உங்களுக்கு தற்போதைக்கு நலம் பயக்கும் அரசியலாகும்... எங்களின் மெல்லிய இதழ்களில் ஆக்ரோஷ கேள்விகளை நீங்கள் இதுவரை கேட்டிருக்க மாட்டீர்கள் தான் என்செய்வது இம்முறை புரட்சி எங்களிடமிருந்து துவங்கியதாய் எண்ணிக்கொள்ளுங்கள் என் அருமை அரசியல்காரர்களே...

நீல நிறக் குடையும் மை கிளாஸ்மேட்ஸ் நோட்டும்

<3 ஏதோ ஒரு டாக்குமெண்டைத் தேட என் அலமாரியினை மொத்தமாக கலைத்து தேடுகையில் மை கிளாஸ்மேட்ஸ் நோட்டில் இருந்து கீழே விழுந்த  நாலாய் மடிக்கப்பட்டிருந்த அந்த காகிதத்தை  முதலில் எடுத்து வைக்கவே எத்தனித்தேன். ஏதோ யோசனையில் என்னவாயிருக்குமென பிரித்துப் பார்க்கையில் அது உனக்காக எழுதிய பாதியில் நிறுத்திய காதல் கடிதமது இதோ இப்படித்தான் ஆரம்பித்திருந்தேன் மழையின் கடைசித் துளிகளை  தன் பிஞ்சுக் கைகளை நீட்டி சேகரிக்கும் ஒரு சிறுவனைப் போல முடிவிலா அழகுடைய உன் சின்னச் சின்ன முக பாவனைகளை ஒவ்வொரு கண்ணியாய் கட்டி வைக்கிறேன்  என் மனதின் கனவுச் சாளரத்தில்  இதோ இன்றைய பொழுது நீ நடந்து வருகையில்  நேராக பிடித்து வந்த  அந்த நீல நிறக் குடையிலிருந்து உதிர்ந்த அந்த மழை நீரைப் பார்க்கையில்  தொடர்பற்று உனக்கு வரும்  ஏதோ ஒரு கனவில நீ தீவிரமாய் திருடனைத் துரத்திக்கொண்டிருக்கும் வேளையில் உனக்கெதிரே  நானும் ஏதேனுமொரு தருணத்தில் வரலாம் உன் அத்தனை முகபாவனைகளையும் ஒருசேர கொள்ளையடித்த குற்றத்திற்காக  கனவில் கைது செய்யப்படுகிறேன் மறுநாள் புன்னகைத்தபடி சொல்கிறாய் நேத்து... வெட்கம் நீ.. மீண்டும் வெட்கம்.. சற